மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் சின்னசேலம் ரயில் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டவே வேண்டாம், குடகு மலையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தமிழகத்துடன் உடனே இணைத்திடவேண்டும். தண்ணீர் கொடு இல்லையேல் தனியாக விடு, நீராட விடு இல்லையேல் போராட விடு என கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கராபுரம் தொகுதிச் செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் ம.கு.சு.சங்கர், கராத்தே சக்திவேல், ஜீவானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன், தமிழன் கார்த்திக் ஆகியோர் ரயில் பயணிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பழனி ரமேஷ், யுவராஜ், ரமேஷ் பிரபாகரன் உள்பட கட்சித் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

