முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

விழுப்புரத்தில் துறவறம் பூணும் இளம்பெண் 

விழுப்புரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் துறவறம் பூணப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:34 am IST

விழுப்புரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் துறவறம் பூணப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து ஜெயின் குழுத் தலைவர் கியான் சந்த் போரா விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஆச்சார்யர் 1008 ஸ்ரீ நானேஷ்ஜியின் ஆசி பெற்ற, மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த செல்வி தீபா ஜெயின்(27) வருகிற வெள்ளிக்கிழமை விழுப்புரத்தில் துறவு ஏற்க உள்ளார்.
 விழுப்புரம் ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இதற்கான நிகழ்ச்சியில் குருதேவர் ஸ்ரீ வியராஜ்ஜி உத்தரவின்படி, அவரது சிஷ்யர் ஸ்ரீ
 வினோத்முனிஜி கலந்து கொண்டு தீபா ஜெயினுக்கு தீட்சை வழங்கி துறவு வாழ்க்கையைத் தொடக்கி வைக்கிறார்.
 இதையொட்டி, வியாழக்கிழமை காலை கிழக்கு பாண்டி சாலை, சந்தான கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ சுஸ்வாணி மாதா கோயிலில் இருந்து திரு.வி.க. சாலையில் உள்ள ஸ்ரீ சண்முகா திருமண மண்டபம் வரை ஊர்வலம் நடைபெறும்.
 தொடர்ந்து, அன்று மாலை சண்முகா திருமண மண்டபத்தில் வாழ்த்தரங்கம் நடைபெறும். இந்த விழாவில், மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. பாரி, கல்வியாளரும் வருமான வரி அலுவலருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.