திண்டிவனம் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கான "உழவன் செயலி' திட்ட தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
தமிழக அரசு விவசாயிகளுக்காக "உழவன் செயலி'யை அறிமுகம் செய்துள்ளது.இந்த திட்டத்தின் மூலம் வேளாண்துறையில் உள்ள மானிய திட்டங்கள், வானிலை நிலவரங்கள்,விதைகள், உர இருப்புகள், சந்தை நிலவரங்கள் போன்ற தகவல்களை விவசாயிகள் தங்கள் இருப்பிடங்களில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும்.
இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ் தலைமை தாங்கி "உழவன் செயலி' திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திண்டிவனம், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை துணை இயக்குநர் தேவநாதன், துணை இயக்குநர் (மத்திய திட்டம்) மோகன்தாஸ், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) தாமோதரன்,செயற்பொறியாளர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேல்பூரி

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி: லிட்டருக்கு ரூ. 1.5-ஆக குறைப்பு!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


