ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

கிராமங்களில் அரசுத் திட்டங்களை செயல்படுத்த விழிப்புணர்வுக் கூட்டங்கள் 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 227 கிராமங்களில் இலவச சமையல் எரிவாயு, மின் இணைப்பு உள்ளிட்ட 7 அரசுத் திட்டங்களை மே 5-க்குள் செயல்படுத்தும் பொருட்டு, விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:30 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 227 கிராமங்களில் இலவச சமையல் எரிவாயு, மின் இணைப்பு உள்ளிட்ட 7 அரசுத் திட்டங்களை மே 5-க்குள் செயல்படுத்தும் பொருட்டு, விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 விழுப்புரம் மாவட்டத்தில், கிராம தன்னிறைவு இயக்கத்தின் கீழ் 227 ஊராட்சிகளை தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமங்களில் பொது சுகாதாரம், மின் இணைப்பு, வங்கி சேவை உள்ளிட்ட 7 திட்டங்களை, ஏப்.14 தொடங்கி மே 5-ஆம் தேதிக்குள் முழுமையாகச் செயல்படுத்த விழிப்புணர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 இந்த வகையில், விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கம், காவணிப்பாக்கம் பகுதிகளில் கிராம தன்னிறைவு இயக்க விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில், திட்ட இயக்குநர் மகேந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
 தமிழகத்தில் தன்னிறைவு இயக்கம் தொடங்கி 1,477 கிராமங்களைத் தேர்வு செய்து, 7 திட்டப்
 பணிகளை முழுமையாகச் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 227 கிராமங்களில் இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
 அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கி பயன்படுத்துதல், வங்கிக் கணக்கிலேயே இரு வகை ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் இணைதல், எரிவாயு உருளை இல்லாதோருக்கு உடனடியாக இலவச சமையல் எரிவாயு இணைப்பு, மின் இணைப்பு இல்லாதோருக்கு உடனடியாக மின் இணைப்பு, மானிய விலையில் மின்சார பல்புகள், குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான தடுப்பூசி மற்றும் நல உதவிகள் ஆகிய 7 திட்டங்கள் முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
 இதனுடன் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கல் வீடுகளும் வழங்கப்படுகின்றன. இந்த வீடுகளுக்கு ரூ.1.70 லட்சம் தொகையாகவும், கட்டுமானப் பணிக்கு வேலை செய்யும் கூலியாக ரூ.18,500-ம் வழங்கப்படும். இதனுடன் ரூ.12 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கழிப்பிடமும் வழங்கப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
 திட்டங்கள் தொடர்பாக, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், மின்வாரிய செயற்பொறியாளர் மதனகோபால், பூச்சியியல் வல்லுநர் கஜபதி ஆகியோர் விளக்கிப் பேசினர்.
 இத்திட்டத்தின் மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீபன் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில், ஏப்.14 முதல் மே 5-ஆம் தேதிக்குள் 7 அரசுத் திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கெனவே நடைமுறையிலுள்ள இந்த திட்டங்கள் குறித்து தெரியாமல் இருந்தாலும், தற்போது கேட்டறிந்து மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். வட்ட வழங்கல் அலுவலர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசமூர்த்தி, நாராயணசாமி, சொக்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்: பொய்யப்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு, அரசுத் திட்டங்கள் குறித்து முறையாகதகவல் சொல்வதில்லை. வீடுகள், கழிப்பிட கட்டடம், எரிவாயு உருளை போன்ற திட்டங்களை வசதிபடைத்தவர்களுக்கும், கட்சியினருக்கும் வழங்கும் நிலைதான் உள்ளது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படுவதில்லை என்று சரமாரி குறைகளை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 பொது மக்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், இனி திட்டங்கள் குறித்து, ஊராட்சி செயலர் மூலம் உரிய தகவல் அளிக்கப்படும். குறைகள் இருந்தால், அந்தந்த துறை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.