மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை, அறிவியல் கல்லூரியின் 80ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் துணை முதல்வர் ச.திருநாவுக்கரசு வரவேற்றார். கல்லூரி முதல்வர் சு.விஜயகாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.கல்லூரியின் செயலர் இராஜிவ்குமார் இராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வேலூர் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மு.வளர்மதி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பேருரையாற்றி, கல்லூரியின் ஆண்டு மலரை வெளியிட்டார்.
மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
அவர் பேசுகையில் , ஆதீனத்தின் 18ஆம் பட்டம் சுவாமிகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். சமயப் பணி செய்யும் போதே சமுதாயப் பணியாக 1938ஆம் ஆண்டு இந்தக் கல்லூரியை தொடங்கினார். நாம் எதைச் செய்தாலும் நீண்ட காலத்துக்கு பயன் தரும் வகையில் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தைப் பார்க்க வேண்டும் என்பதே நமது வீர சைவ மடத்தின் கொள்கை. தமிழன் நினைத்தால் எந்தப் பதவிக்கும் வரலாம் என்ற எண்ணம் மாணவர்களுக்கு வர வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் குடும்பத்தையும்,உங்கள் சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும் என்றார்.
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் இரா.வள்ளி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை
ரூ. 6.25 கோடி காசோலை மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!

சீா்காழியில் தீவிர வாகனச் சோதனை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


