கள்ளக்குறிச்சி அருகே மொபெட் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆனந்தராஜா (18). இவர், தனது நண்பரான புதூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் பிரகாஷுடன் நைனார்பாளையம் சாலையில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். மொபெட்டை பிரகாஷ் ஓட்டிச் சென்றார்.
செம்பாக்குறிச்சி மான்குட்டை அருகே சென்ற போது மொபெட் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். அவர்களில் ஆனந்தராஜா வேப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பிரகாஷ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!
ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


