ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5,400-க்கு உளுந்து கொள்முதல்

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மத்திய அரசின் ஆதரவு விலையான ரூ.5,400-க்கு உளுந்து கொள்முதல் செய்யப்படுவதாக விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Updated on
1 min read

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மத்திய அரசின் ஆதரவு விலையான ரூ.5,400-க்கு உளுந்து கொள்முதல் செய்யப்படுவதாக விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் லட்சுமணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்து உற்பத்தி நல்ல முறையில் உள்ளது. விவசாயிகள் விளைவித்த விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி, மத்திய அரசின் திட்டத்தில் உளுந்து கொள்முதல் திட்டம், விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 கடந்த 17-ஆம் தேதி மத்திய அரசின் உளுந்து கொள்முதல் திட்டத்தில், ஆதரவு விலையான குவிண்டாலுக்கு ரூ.5,400-க்கு கொள்முதல் செய்யும் திட்டத்தை ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தொடக்கிவைத்தார். 
அதன்பிறகு கடந்த 10 நாள்களில் மட்டும் 20 டன் வரை உளுந்து கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ.10.80 லட்சம் வங்கி மூலம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.  எனவே, உளுந்து விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி மத்திய அரசின் ஆதரவு விலையான ரூ.5,400-ஐ பெற்று பயனடைய வேண்டும் என்று அதில் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com