அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற விழா

சங்கராபுரம் அருகே பாச்சேரி கிராமத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கேஜிபிவி பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:52 am IST

சங்கராபுரம் அருகே பாச்சேரி கிராமத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கேஜிபிவி பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற விழா புதன்கிழமை நடைபெற்றது.
 ஆமினா அறக்கட்டளை கூடுதல் செயலர் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் கார்குழலி வரவேற்றார்.
 அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட மாநிலப் பொறியாளர் சுதாகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், வட்டாரப் பொறியாளர் செந்தில்வேலன் ஆகியோர் மரங்களின் பயன்கள் பற்றி எடுத்துரைத்தனர்.
 சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், பாச்சேரி பகுதியில் சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பது, புங்கை, பூவரசு, வேம்பு போன்ற மரங்களின் விதைகளை சாணத்தில் இட்டு உருட்டி நீர்நிலைகள், நிலங்களின் ஓரங்களில் ஆங்காங்கே போடுவது, பாரம்பரிய மரமான பனை வளர்க்க பனங்கொட்டைகளை நடவு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. கிராமக் கல்விக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.