தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

காவலர் மீது தாக்குதல்: 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் நிலைய பொறுப்பு (பாரா) பணியில் ஈடுபட்டிருந்த காவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், அவரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:53 am IST

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் நிலைய பொறுப்பு (பாரா) பணியில் ஈடுபட்டிருந்த காவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், அவரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் பாலமுரளி சனிக்கிழமை மாலை கச்சிராயப்பாளையம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, கள்ளக்குறிச்சி வஉசி நகரைச் சேர்ந்த முனாப் மகன் அஸ்லாம் முஸ்தபா (27), பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, வெங்காயம் விற்றுக்கொண்டிருந்தாராம்.
 அப்போது, அஸ்லாம் முஸ்தபாவிடம் காவல் உதவி ஆய்வாளர் இரு சக்கர வாகனத்தின் ஆவணங்களை கேட்டபோது, அவரிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை எனத் தெரிகிறது. உடனடியாக இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் நிலைய பொறுப்பில் இருந்த தலைமைக் காவலர் முருகனிடம் ஒப்படைத்துவிட்டு, காவல் உதவி ஆய்வாளர் வெளியே சென்றுவிட்டார்.
 இரவு 7 மணிக்கு அஸ்லாம் முஸ்தபா காவல் நிலையத்துக்குச் சென்று தலைமைக் காவலர் முருகனை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவரைத் தாக்கிவிட்டு இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாராம்.
 இதுகுறித்து தலைமைக் காவலர் முருகன் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் பாலமுரளி வழக்குப் பதிவு செய்து அஸ்லாம் முஸ்தபாவை கைது செய்தார்.
 இந்த நிலையில், இரவு 8.30 மணிக்கு காவல் நிலையத்துக்கு சென்ற கள்ளக்குறிச்சி வஉசி நகரைச் சேர்ந்த முனாப் மகன் சதாம் உசேன் (28), சையத் உசேன் மகன் சையத் முஸ்தபா (38) ஆகியோர் அஸ்லாம் முஸ்தபா மீது எப்படி புகார் அளிப்பாய் எனக் கேட்டு தலைமைக் காவலர் முருகனை தாக்கினராம். இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.