8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம்

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் புதன்கிழமை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் புதன்கிழமை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரத்தில் மனித உரிமைகள் கழகம் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலர் ஆர்.கந்தன் தலைமை வகித்தார்.  மாவட்ட இணை செயலர் பாலசந்தர்,  துணை செயலர்கள் கதிரவன், குமரகுரு,  ஒன்றிய செயலர் ராஜி, சாமிநாதன், அக்பர், நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  
விழுப்புரம் காந்தி வீதியில்,  வணிகர் சங்கக் கூட்டமைப்பினர் சார்பில்,  கருணாநிதியின் உருவப் படத்துக்கு சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கேபிள் டிவி பொது நலச் சங்கத்தினர் சார்பில்,  கருணாநிதி உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை சிவசக்தி நகரில் கருணாநிதி உருவப்படத்துக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.  திமுக நிர்வாகிகள் குமார்,  பாலகிருஷ்ணன்,  முன்னாள் செயலர் பழனி,  கிளை செயலர் பாண்டியன்,  கோவிந்தராஜ்,  அன்புசுரேந்தர்,  உதயசூரியன், உதயநிதி  உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதே போல,  விழுப்புரம் வண்டிமேடு,  கீழ்ப்பெரும்பாக்கம்,  புதிய பேருந்து நிலையம்,  கே.கே.சாலை,  காந்தி சிலை சந்திப்பு,  திருவிக வீதி,  திருச்சி சாலை,  மேல வீதி,  கிழக்கு பாண்டி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளிலும்,  குடியிருப்பு பகுதிகளிலும்,  கிராமங்களிலும் திமுக உள்ளிட்ட கட்சியினரும்,  பல்வேறு அமைப்பினர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் உருவப் படத்தை வைத்து,  பல்வேறு இடங்களில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
செஞ்சியில்... கருணாநிதி மறைவையொட்டி, செஞ்சி நகரம் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை இரவு வரை வெறிச்சோடிக் காணப்பட்டது. 100 சதவீத அடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
அனைத்துக் கட்சியினர் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து செஞ்சி கூட்டு சாலை வரை நடைபெற்ற ஊர்வலத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 
கள்ளக்குறிச்சியில்... கருணாநிதி மறைவையொட்டி கள்ளக்குறிச்சியில் கடைகள் புதன்கிழமையும் அடைக்கப்பட்டிருந்தன. 
கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து திமுக நகர செயலாளர் சுப்ராயலு தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
சின்னசேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட விவசாய பிரிவுச் செயலாளர் அண்ணாமலை தலைமையிலும் நைனார்பாளையம் கிளைச் செயலாளர் பாலு தலைமையிலும் கச்சிராயப்பாளையத்தில் நகரச் செயலாளர் சிதம்பரம் தலைமையிலும் கல்வராயன்மலையில் மண்டகப்பாடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பிச்சன் தலைமையிலும் தியாகதுருகத்தில் முன்னாள் சேர்மென் பொன்.இராமகிருஷ்ணன் தலைமையிலும் திமுகவினரின் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.