பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சங்கை தமிழ்ச் சங்க சொற்பொழிவு நிகழ்ச்சி

சங்கராபுரத்தில் சங்கை தமிழ்ச் சங்கம் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:56 am IST

சங்கராபுரத்தில் சங்கை தமிழ்ச் சங்கம் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். உலக தமிழ்க் கவிஞர் பேரவை பொதுச் செயலர் புலவர் கு.சீத்தா, வள்ளலார் மன்றச் செயலர் இரா.நாராயணன், தமிழ் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன், நல்லாசிரியர் மு.முகமதுஉசேன், கல்லை தமிழ்ச் சங்க துணைச் செயலர் இல.அம்பேத்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் ச.சாதிக்பாட்ஷா வரவேற்றார்.  நிகழ்ச்சியில் வள்ளலார் நெறி பரப்புநர் சிவஞான அடிகள், முனைவர் தே.சாந்தகுமார், மூவேந்தர் முத்தமிழ் கழகத் தலைவர் தி.ம.சுப்பிரமணியன், ஓவியர் மு.கலைச்செழியன், புலவர் பெ.சயராமன், திருவள்ளுவர் தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் ம.விசயஆனந்த், மருத்துவர் வை.நெடுஞ்செழியன், கவிஞர்கள் செ.வ.மதிவாணன், இரா.கதிர்வேல், ஆசிரியர் கோ.காயத்திரி ஆகியோர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் 
மு.கருணாநிதி பற்றி பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
 வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன், திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்தரராஜன், தலைமை ஆசிரியர்கள் பெ.கலைச்செல்வி, சி.லட்சுமி, வணிகர் சங்கச் செயலர் கோ.குசேலன், அரிமா மாவட்டத் தலைவர் வ.விஜயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  கவிஞர்கள் சண்முகம் பிச்சைப்பிள்ளை, செ.வ.மகேந்திரன் ஆகியோர் இசைப் பாடல்கள் பாடினர். சங்கப் பொருளாளர் தி.கோ.நரசிம்மன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.