திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

காச நோய் கண்டறியும் முகாம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே காச நோய் கண்டறியும் முகாம் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

திருவெண்ணெய்நல்லூர் அருகே காச நோய் கண்டறியும் முகாம் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 விழுப்புரம் மாவட்ட காசநோய் தடுப்பு மையம் சார்பில், கிராமங்களில் காச நோய் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 அந்த வகையில், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்திக்குப்பம் கிராமத்தில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியும், காச நோய் கண்டறியும் முகாமும் நடைபெற்றது.
 மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநர் சுதாகர் தலைமை வகித்தார். காச நோய் மைய மருத்துவ அலுவலர் நேதாஜி சுபாஷ்
 சந்திரபோஸ், ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார், நலக் கல்வியாளர் மெகபூப்பாஷா, முதுநிலை சிகிச்சை பிரிவு மேற்பார்வையாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இந்தியாவில் காச நோயின் பாதிப்புகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், காச நோய் இல்லாத இந்தியாவை உருவாக்கவும், தமிழகத்தில் காச நோய் பாதிப்பை முற்றிலும் அகற்றவும் மத்திய, மாநில அரசுகளின் தடுப்பு நடவடிக்கைகள், விழுப்புரம் மாவட்டத்தில் காச நோய் தடுப்புப் பணிகள் குறித்து பேசினர்.
 இதைத் தொடர்ந்து, சித்தானங்கூர் நிலா கலைக் குழுவினரின் காச நோயின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. காச நோய் பிரிவு பணியாளர்கள் சுரேஷ், ராமச்சந்திரன், சக்திவேல், ஜெகன்நாதன், முருகன், திருவெண்ணெய்நல்லூர் தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.