மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பைக் மீது லாரி மோதல்: 2 பேர் சாவு

திருநாவலூர் அருகே பைக் மீது டேங்கர் லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

திருநாவலூர் அருகே பைக் மீது டேங்கர் லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
 உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் காலனியைச் சேர்ந்த ஏழுமலை மகன் கார்த்திக் (32). அவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த எத்திராஜ் மகன் மோகன்தாஸ் (32). கூலித்தொழிலாளிகளான இவர்கள் இருவரும் புதன்கிழமை பைக்கில் பண்ருட்டிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
 கெடிலத்துக்கு முன்பாக உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே வந்தபோது, எதிரே பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி பைக் மீது மோதியது.
 இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 திருநாவலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.