பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மேல்மலையனூர் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரைக் கண்டித்து, செஞ்சி வட்ட துரும்பர் விடுதலை இயக்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

மேல்மலையனூர் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரைக் கண்டித்து, செஞ்சி வட்ட துரும்பர் விடுதலை இயக்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடவெட்டி அம்பிகாகெம்பு தலைமை வகித்தார். செவலபுரை த.சுந்தராவ் முன்னிலை வகித்தார். சிபிஐஎம் வட்டச் செயலர் முருகன், துரும்பர் விடுதலை இயக்க இணை அமைப்பாளர் அல்போன்ஸா, மதிமுக ஒன்றியச் செயலர் ஏழுமலை, துரும்பர் இயக்க அமைப்பாளர் அருள்வளவன், தலித் மகிழரசு, சிபிஐ வட்டச் செயலர் செல்வராஜ், சலவை நலக் குழு பிரகாஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
 வடவெட்டி, செவலபுரை, அவலூர்பேட்டை, வடுகப்பூண்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பட்டியலின (எஸ்.சி) பழங்குடி இன மக்களில் முதியோர், விதவை, ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ஓராண்டுக்கு மேலாக உதவித் தொகை வழங்காமல் காலந்தாழ்த்தி வரும் அதிகாரிகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.