எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

விழுப்புரத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மை நலத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

விழுப்புரத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மை நலத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் ராம்சுந்தர் வரவேற்றார்.  கோட்டாட்சியர் குமாரவேல்,  வட்டாட்சியர் சையத்மெஹ்மத்,  அப்துல்கபூர் ஐடிஐ நிறுவனர் முகமதுஅலி,  பவ்டா நிறுவனர் ஜாஸ்லின்தம்பி,  சமூக ஆர்வலர் சகாயராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்து,  சிறுபான்மை இன மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிப் பேசியதாவது:  
விழுப்புரம் மாவட்டத்தில்,  சிறுபான்மை இன மக்கள் பயன்பெறும் வகையில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்,  கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம்,  உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலச் சங்கம், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வோருக்கு அரசு நிதி உதவி,  தேவாலயங்கள் புனரமைக்க அரசு நிதி உதவி என பல்வேறு நலத்திட்டங்கள்,  மானிய கடன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  
இதனை சிறுபான்மை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். விழாவில்,  சிறுபான்மை மக்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிறுபான்மை மக்கள் பலர் கலந்துகொண்டனர். 
விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசிக்கொண்டிருந்தபோது, மேடையில் அமர்ந்திருந்த முகமதுஅலி என்பவர்,  உடல் நலக்
குறைவு காரணமாக திடீரென மயங்கி விழுந்தார்.   உடனே அவரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீட்டு கார் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.