மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்தல்

திருக்கோவிலூரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திருக்கோவிலூரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இது குறித்து,  அக்கட்சியின் ,  விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் செய்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:  திருக்கோவிலூர் அருகே மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்,  கடந்த 12-ஆம் தேதி அதே பள்ளியில் விடுதியில் தங்கி படித்து  வரும்,  10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார்.  அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது,  அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.   
இதுகுறித்து அந்தப் பள்ளி நிர்வாகம் கடந்த15-ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில்,  போலீஸார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர்.  அப்போது,  தன்னை பலாத்காரம் செய்ய முயன்றவர் யார் என தெரியவில்லை என்றே அந்த மாணவி கூறியிருந்தார். 
இதனிடையே,  பள்ளித் தலைமை ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில்,  அந்தப் பள்ளியின் கடைநிலை ஊழியர் ஆல்பர்ட்,  போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  உண்மை குற்றவாளியை காப்பாற்ற போலீஸார் அவசரமாக இந்த வழக்கை முடித்திருப்பதும்,  இதில், தொடர்புடைய உண்மை குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பதும் தெரிகிறது.  இதே போல், செங்கணகொல்லை கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர்,  கடந்த 26.10.2017ம் தேதி,  அங்குள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  சில ஆண்டுகளுக்கு முன்பு,  மாணவி ஒருவர் சந்தேகமான  முறையில் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவங்கள்,  பெற்றோர்களுக்கு  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த வழக்குகளை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிசிஐடி)  மாற்றம் செய்து,  வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.  இதனை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் வருகிற 26ஆம் தேதி, திருக்கோவிலூரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது என்றார்.  கலியபெருமாள்,  சுரேஷ்,  மணிவாசகம்,  கலியமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.