/

ஐராவதம் மகாதேவனுக்கு புகழஞ்சலி

கல்லை தமிழ்ச் சங்கம் சார்பில் "தினமணி' முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனுக்கு புகழஞ்சலி, பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய

Updated On :25 டிசம்பர் 2018, 10:03 am IST

கல்லை தமிழ்ச் சங்கம் சார்பில் "தினமணி' முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனுக்கு புகழஞ்சலி, பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் வீ.கோவிந்திராசன் தலைமை வகித்தார். பணி ஓய்வுபெற்ற மின்துறை வி.வெங்கட்ராமன், பொருளாளர் இரா.நல்லமுத்து, ஏமப்பேர் வே.பூசமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் செ.வ.மதிவாணன் வரவேற்றார். "ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப் பணியில் சிறப்பாக பணிபுரிந்து, பின்னர், தொல்லியல் துறையில் ஆழ்ந்த ஆராய்ச்சிகளைச் செய்து, தமிழரின் நாகரிகத்துக்கான ஆதார அடிப்படைகளை சிறப்பாக வெளிப்படுத்தியவர்' என சங்கராபுரம் திருக்குறள் பேரவையின் செயலாளர் அ.லட்சுமிபதி புகழாரம் சூட்டினார்.
தியாகதுருகம் கவிஞர் அரங்க.மின்னல் திருக்குறளின் "இரவு' எனும் 106-ஆவது அதிகாரத்துக்கு விளக்க உரையாற்றினார்.
பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவி அ.அர்சா சாம்லா "பாட்டுக்கொரு புலவன் பாரதி' எனும் தலைப்பில் பேசினார். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசை சங்க துணைத் தலைவர் வழங்கிப் பாராட்டினார். 
தென்னாற்காடு மாவட்ட தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர் பெ.ஆராவமுதன் தலைமையில் "என் பார்வையில் நம் பாரதி' எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. நாகலூர் துணைப் பதிவாளர் மு.பெ.தனக்கண்ணு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.