எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க நாற்பெரும் விழா

சங்கராபுரத்தில் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நாற்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:20 am

தினமணி

சங்கராபுரத்தில் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நாற்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அறிவியல் அறிஞர் தேவநேயப் பாவாணர் பிறந்த நாள், சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் நினைவு நாள், உலகத் தாய்மொழி நாள், பழமொழிகளில் உள்ள பிழைகள் ஓர் எடுத்துக்காட்டு ஆகியவை நாற்பெரும் விழாவாக நடைபெற்றன.
 விழாவுக்கு நல்லாசிரியர் சி.லட்சுமி தலைமை வகித்தார். நல்லாசிரியர் து.ராமகிருஷ்ணன், அஞ்சல் அலுவலர் கோ.விஜயன், ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் ப.அழகப்பன், புலவர் மு.ஜெயக்குமாரி, ஆசிரியர்கள் சே.கலைச்செல்வி, ப.தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் செயலர் அ.ராமசாமி வரவேற்றார்.
 ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முகவர் மு.ரஞ்சித் குறள் விளக்களிளித்தார். திருக்கோவலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சிங்கார.உதியன் தொடக்க உரையாற்றினார். தமிழ் வழிக் கல்வி இயக்கத் தலைவர் அ.சி.சின்னப்பத்தமிழன் தேவநேயப் பாவாணரின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
 விழாவில் தேவநேயப் பாவாணர் பற்றி ஓய்வு பெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பா.ஜெகதீசன், உலகத் தாய்மொழி நாள் குறித்து ஆசிரியர் பழனிச்சாமி, சிங்காரவேலர் குறித்து வழக்குரைஞர் ந.தமிழ்க்குமரன், பிழைமொழிகளான பழமொழிகள் குறித்து ஜீப் ஓட்டுநர் ந.தனவேல் ஆகியோர் பேசினார்.
 கவிஞர்கள் பூட்டைப் பாண்டியன், கள்ளக்குறிச்சி செ.வ.மகேந்திரன் ஆகியோர் தமிழிசைப் பாடல்களை பாடினர். சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க.செம்பியன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
 கல்லைத் தமிழ்ச் சங்கச் செயலர் செ.வ.மதிவாணன், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் துணைத் தலைவர் சி.இளையாப்பிள்ளை நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.