வல்லம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

வல்லம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாட்டார்மங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலர் கு.விநாயகமூர்த்தி தலைமை வகித்து பேசினார் .
Updated on
1 min read

வல்லம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாட்டார்மங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலர் கு.விநாயகமூர்த்தி தலைமை வகித்து பேசினார் . வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் பரிமளா பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். களவாய் சேகர், இரும்புலி கிருஷ்ணன், ஒன்றியப் பொருளர் மனோகரன், பாசறைத் தலைவர் பாலமுருகன், கம்பந்தூர் ஆறுமுகம், தென்புத்தூர் செந்தில், ஏ.பி.எஸ்.தமிழ் உள்ளிட்டோர் கொண்டனர்.
 வருகிற 24-ஆம் தேதி அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை 66 ஊராட்சிகளிலும் சிறப்பாகக் கொண்டாடுவது.
 அதிமுகவில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது மற்றும் புதுப்பிப்பது, வல்லம் ஒன்றியத்தில் உள்ள 12 கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது. அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதா சிலை நிறுவப்பட்டதை வரவேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
 நிறைவேற்றப்பட்டன.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com