முன்னாள் எம்எல்ஏ சேவல் கோ.கோதண்டராமன் (67) உடல்நலக் குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த கொடுங்கால் கிராமத்தைச் சேர்ந்த இவர், உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். கொடுங்கால் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது உடல் கொண்டுவரப்பட்டு, அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சேவல் கோ.கோதண்டராமன் கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், முகையூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அண்மையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, முகையூர் ஒன்றியச் செயலராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்

ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் பழனிசாமி: சு.வெங்கடேசன் எம்.பி.
பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

