புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை கடத்த முயன்ற 720 மதுப் புட்டிகளை கோட்டக்குப்பம் பகுதியில் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் உள்ள மது விலக்கு சோதனைச்சாவடியில் தலைமைக் காவலர் பாஸ்கர் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 15 அட்டைப் பெட்டிகளில் மொத்தம் 720 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. ஒரு லட்சம் இருக்கும்.
இது தொடர்பாக காரில் இருந்தவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், அவர் புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஜெயவேல் மகன் சடையப்பன் (42) என்பதும், புதுச்சேரியில் குறைந்த விலைக்கு மதுப் புட்டிகளை வாங்கி சென்னைக்கு கடத்திச் சென்று விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மதுப் புட்டிகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மது விலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாய் கடித்து குதறிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமா?
கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 22 முதல் தொடா் போராட்டம்

நாகையில் பழங்கால வெண்கலச் சிலை கண்டெடுப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


