வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

வீட்டில் திருட முயற்சி: இளைஞர் சிக்கினார்

ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை அலுவலரின் வீட்டில் திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 9:35 am IST

ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை அலுவலரின் வீட்டில் திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் உண்ணாமலைசெட்டி சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பூமாலை (60). ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை அலுவலர். தற்போது ஆடிமாதம் என்பதால் அந்தப் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக, சனிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் திரையிடப்பட்ட சினிமாவை பார்ப்பதற்காக பூமாலை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
அப்போது, பூமாலை மட்டும் வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டின் முன்பக்கக் கதவு திறக்கப்பட்டிருந்ததோடு, வீட்டினுள் மர்ம நபர்கள் 3 பேர் நிற்பதைப் பார்த்துள்ளார். பூமாலையைப் பார்த்ததும் அவர்களில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்.
இதனைப் பார்த்து பூமாலை கூச்சலிடவே, அந்தப் பகுதி மக்கள் ஓடிவந்து அவரது வீட்டுக்குள் சென்று மாடியில் பதுங்கியிருந்த இளைஞரை பிடித்தனர். அப்போது அந்த இளைஞர் தாக்கப்பட்டார். அவரை 
பொதுமக்கள் கடலூர் புதுநகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.