/

பெரியாண்டச்சி பத்ரகாளி கோயிலில் ஆடித் திருவிழா

கள்ளக்குறிச்சியில் சிதம்பரம்பிள்ளை சாலையில் அமைந்துள்ள பெரியாண்டச்சி பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடித் திருவையொட்டி பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:32 am IST

கள்ளக்குறிச்சியில் சிதம்பரம்பிள்ளை சாலையில் அமைந்துள்ள பெரியாண்டச்சி பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடித் திருவையொட்டி பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், சனிக்கிழமை (ஜூலை 21) அதிகாலை 5 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, 108 கோ மாதா பூஜை, கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. அன்று இரவு 7 மணிக்கு பெரியாண்டிச்சி பத்ரகாளி திருவீதி உலா நடைபெற்றது. 
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து பக்தர்கள் கோமுகி நதிக் கரைக்குச் சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து சக்தி அழைத்தனர். அப்போது, பக்தர்கள் செவ்வாடை அணிந்து 108 பால்குடம், 108 அக்னி சட்டிகளை தலையில் ஏந்தியவாறு கச்சேரி சாலை, சேலம் - சென்னை நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். இதையடுத்து கோயிலில் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் முன்பாக காளிக்கோட்டை இடிக்கும் நிகழ்ச்சி, மயான சூறை விடுதல் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.