விழுப்புரத்தில் மதிமுக மாணவர் அணி சார்பில், மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாண்டியன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் வெங்கடாசலம், ராமு, முத்தரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் துணை பொதுச் செயலாளர் மணி, மாவட்டச் செயலாளர்கள் ஜெய்சங்கர், பாபு கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். "பெரியார்-அண்ணா' என்ற தலைப்பில் கல்லுôரி மாணவ, மாணவிகள் பேசினர்.
புதுச்சேரி, அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லுôரி பேராசிரியர் ராஜவேலு, விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுôரி பேராசிரியர் சிவா, வில்லியனுôர் ராக் கலை அறிவியல் கல்லுôரி பேராசிரியர் ரஞ்சன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். வெற்றி பெற்ற முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட நிர்வாகிகள் நரசிம்மன், சேட்டு ஜெகதீஷ், ஒன்றிய நிர்வாகிகள் ரவி, விநாயகமூர்த்தி, வெங்கடேசன், முன்னாள் நகரச் செயலாளர் ஜானகிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் பெரியார் தொகுத்து வழங்கினார். நகரச் செயலாளர் சம்பந்தம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






