பாரதியார் தமிழ்ச் சங்க விழா
தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள், உலக அன்னையர் தினம், உலக செவிலியர் தினம், தொழிலாளர் தினம் என நாற்பெரும் விழாவாக தியாகதுருகம் ஊராட்சி


தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள், உலக அன்னையர் தினம், உலக செவிலியர் தினம், தொழிலாளர் தினம் என நாற்பெரும் விழாவாக தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர் சங்கத் தலைவர் அரங்க.செம்பியான் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்ட தமிழ்க் கவிஞர் பேரவை மகளிரணிச் செயலர் அரங்க.அமுதமொழி, திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பாவலர் துரை.ராமகிருஷ்ணன், சங்கராபுரம் ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் முகமது ரபீக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் வரவேற்றார்.
"பத்துப்பாட்டில் தமிழர் வாழ்வியல்' என்ற தலைப்பில் விழுப்புரம் முதுகலை ஆசிரியர் பா.சூரிய நாராயணா, தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் தமிழ்த் தொண்டு தலைப்பில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தெ.சாந்தகுமார், உலக அன்னையர் தினம் தலைப்பிலும், தமிழாசிரியை கவிஞர் காயத்ரி சிவபிரகாஷ், தொழிலாளர் தினம் தலைப்பில் மாவட்ட கலைஇலக்கியப் பேரவைச் செயலர் மு.கலியபெருமாள், நெஞ்சொடு கிளைத்தல் திருக்குறள் அதிகாரத்துக்கு கவிமாமணி முத்தமிழ் முத்தன் நாவலடியார் பாடல்களில் படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் திருவண்ணாமலை பாவரசு மு.கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
மக்கள் பாடகர் தேசப்பிரியன், கவிஞர் பாலமுருகன் தமிழிசைப் பாடல்களை பாடினர். விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் ஏ.வி.சரவணனுக்கு கள்ளக்குறிச்சி சான்றோர் பேரவைத் தலைவர் ஆசுகவி.ஆராவமுதன் தோழர் ஜீவானந்தம் விருது வழங்கி பேசினார். சேலம் கவிஞர் பொன்.சந்திரன் தலைமையில் தூய்மையை போற்றுவோம் எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தவமணிகுமார், கவிஞர் கூ.பிச்சப்பிள்ளை, டி.கோவிந்தராஜ், ஆர்.வேல்முருகன், சாத்தனூர் அம்மாசி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். பாரதியார் தமிழ்ச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் தி.வெங்கடாசலபதி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...