ஏ.கே.டி. பள்ளி ஆண்டு விழா
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28வது ஆண்டுவிழா அண்மையில் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28வது ஆண்டுவிழா அண்மையில் நடைபெற்றது.
ஏ.கே.டி. கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஏ.கே.டி. மகேந்திரன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் ம.லட்சுமிபிரியா முன்னிலை வகித்தார். பள்ளிமுதல்வர் கே.வெங்கட்ரமணன் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியை அ.ஸ்டெல்லா ஐரின் குமாரி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.கோமதி பங்கேற்று கடந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்க காசுகளை வழங்கினார். மேலும், நீட் தேர்வின் மூலம் 23 மாணவர்கள், மருத்துவப் படிப்பில் 10 பேர் சேர்க்கை பெற்றுள்ளவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கியும், பள்ளியில் நீண்ட நாள்களாக பணிபுரிந்து வரும் 41 ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகத்தில் சார்பில் மோதிரத்தை அணிவித்தும், 23 அலுவலக பணியாளர்களுக்கு பரிசு வழங்கினார். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சுமதி, ஜெயந்தி, தேன்மொழி, ஏ.கே.டி. உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெகதீசன், நீட் அகாதெமி முதல்வர் பிரதிப்குமார், ஏ.கே.டி பாலிடெக்னிக், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். பள்ளியின் உதவி ஆசிரியர் ஜோதிலிங்கம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...