பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

போலி ரசீதை பயன்படுத்தி மணல் அள்ளிய மூவர் கைது: 4 லாரிகள் பறிமுதல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே, போலி அனுமதி ரசீதை பயன்படுத்தி மணல் அள்ளிச் சென்ற 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:15 am

தினமணி

திருவெண்ணெய்நல்லூர் அருகே, போலி அனுமதி ரசீதை பயன்படுத்தி மணல் அள்ளிச் சென்ற 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை அதிகாலை, திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர் - கரடிப்பாக்கம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 4 டிப்பர் லாரிகளை மடக்கினர். போலீஸாரைக் கண்டதும் அதன் ஓட்டுநர்கள் லாரிகளை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். இதனையடுத்து அவர்களை மடக்கிப் பிடித்து ஆவணங்களை ஆய்வு செய்த போது, போலி அனுமதி ரசீதை பயன்படுத்தி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.
 இதுதொடர்பாக எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலு (42), திண்டிவனத்தை அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(33), தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்(34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.