மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பு

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரம சேவை பிரிவான விவேகானந்த சேவா பிரதிஷ்டான் சார்பில் மாணவர்களின் கல்விக்கான சிறப்பு யாகம் , ஊக்க தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் விழா

News image
Updated On :1 மார்ச் 2018, 3:28 am

தினமணி

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரம சேவை பிரிவான விவேகானந்த சேவா பிரதிஷ்டான் சார்பில் மாணவர்களின் கல்விக்கான சிறப்பு யாகம் , ஊக்க தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் விழா உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு இரா.குமரகுரு எம்எல்ஏ தலைமை வகித்து, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பரிசுகள் வழங்கினார் (படம்). பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சௌ.இராமலிங்கம் சிறப்புரையாற்றினார். ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் யதீஸ்வரி ஆத்ம விகாஸப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.