புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விழுப்புரத்தில் திமுக பிரமுகர் குத்திக் கொலை: தொழிலாளி கைது

விழுப்புரத்தில் புதன்கிழமை நிலப் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் திமுக பிரமுகர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:55 am

தினமணி

விழுப்புரத்தில் புதன்கிழமை நிலப் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் திமுக பிரமுகர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
 விழுப்புரம் கே.கே. சாலை கணபதி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் டே. லெனின் பாண்டியன்(48). திமுக முன்னாள் மாவட்டப் பிரதிநிதி.
 ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவரிடம் நிலம் வாங்குவதற்காக விழுப்புரம் முத்தோப்பைச் சேர்ந்த மாணிக்கம் மகன் தாமோதரன் (35) ரூ.2.50 லட்சம் சீட்டு கட்டி வந்தாராம். இதற்கான நிலத்தை லெனின் பாண்டியன் கொடுக்கவில்லையாம். அவ்வப்போது, சில நிலங்களை காட்டி வாங்கிக் கொள்ளுமாறு கூறுவாராம். ஆனால், கூறியபடி நிலத்தைக் கொடுக்காமல் லெனின் பாண்டியன் அலைக்கழித்து வந்தார்.
 விழுப்புரம் அருகேயுள்ள திருவாமாத்தூர் பகுதியில் நிலம் உள்ளதாகவும், அங்கு சென்று அதைப் பார்க்கலாம் என தாமோதரனிடம் லென்னி பாண்டியன் கூறினாராம். அதன்படி, இருவரும் இருசக்கர வாகனத்தில் அங்கு புதன்கிழமை சென்று விட்டு, விழுப்புரத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.
 புறவழிச் சாலையையொட்டிய சானாதோப்பு என்ற இடத்தில் வந்த போது, நிலத்தை வழங்காமல் இழுத்தடிப்பது குறித்து லெனின் பாண்டியனிடம் தாமோதரன் கேட்டாராம்.
 அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாமோதரன் தான் வைத்திருந்த கத்தியால் லெனின் பாண்டியனைக் குத்தினாராம். அவரிடமிருந்து தப்பிக்க நெடுஞ்சாலையைக் கடந்து அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிக்கு அவர் ஓடினாராம். ஆனால், ரத்தம் அதிகளவில் வெளியேறியதால், சாலையோரத்தில் விழுந்த லெனின் பாண்டியன் உயிரிழந்தார்.
 தகவலறிந்த விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கர், த ôலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
 சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தாமோதரனை போலீஸார் கைது செய்தனர்.
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.