லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி சாவு: உறவினர்கள் சாலை மறியல்

நெய்வேலி அருகே மின் கம்பத்தின் மேல் அமர்ந்து பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் புதன்கிழமை உயிரிழந்தார்.

Updated On :29 மார்ச் 2018, 4:10 am

நெய்வேலி அருகே மின் கம்பத்தின் மேல் அமர்ந்து பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் புதன்கிழமை உயிரிழந்தார்.
 நெய்வேலி அருகே உள்ள கம்மாபுரம் ஒன்றியம், ஓட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி மகன் சரத்குமார் (26). இவர், தற்போது நடைபெற்று வரும் கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியில் சாலையோரங்களில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, வேறு இடங்களில் நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் இந்தப் பணியில், கொம்பாடிக்குப்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 25 பேர் பணியாற்றி வருகின்றனராம்.
 இந்த நிலையில், புதன்கிழமை ரோமபுரி அருகே உள்ள உயரழுத்த மின் பாதை மின் கம்பத்தில் ஏறி அமர்ந்து, சரத்குமார் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின் இணைப்பு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மின்சாரம் பாய்ந்து சரத்குமார் மின் கம்பத்திலேயே கருகி உயிரிழந்தார்.
 தகவலறிந்த சரத்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் உயிரிழந்த சரத்குமாரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
 விருத்தாசலம் வட்டாட்சியர் ஸ்ரீதர், மின்வாரிய உயரதிகாரி ஜெயந்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர் பண்ருட்டி சுந்தரவடிவேல், சேத்தியாதோப்பு ஜவஹர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால், முற்பகல் 12 மணி முதல் மாலை 4.40 மணி வரை போக்குவரத்துத் தடைபட்டது.
 உயிரிழந்த சரத்குமாரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.