வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

விழுப்புரம் மாவட்டத்தில் மே 18-இல் ஆளுநர் ஆய்வு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மே 18) ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளார்.

Updated On :14 மே 2018, 10:59 pm

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழுப்புரம் மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மே 18) ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னையில் தனது வழக்கமான பணிகளுடன், அவ்வப்போது வெளி மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (மே 18) காரில் வரும் அவர், வானூர், ஆரோவில், கோலியனூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் அரசு சுற்றுலா மாளிகையில் அன்று மாலை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமை வருகிறார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி, பிற்பகல் 3.30 மணி முதல் 5 மணி வரை மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.