தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

தியாகதுருகத்தில் தி.க. பொதுக்கூட்டம்: கி.வீரமணி பங்கேற்பு

தியாகதுருகத்தில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 2:53 am

தியாகதுருகத்தில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தியாகதுருகம் சுயமரியாதைச் சுடரொளிகள் கோ.சாமிதுரை, மு.கண்ணன், அ.கூத்தன் ஆகியோரது நினைவு விழா மேடையில்  நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கோ.சா.பாஸ்கர் தலைமை வகித்தார். தியாகதுருகம் திமுக நகரச் செயலாளர் மிசா.பொன்.இராமகிருட்டிணன், விழுப்புரம் மண்டல தி.க. தலைவர் க.மு.தாஸ் செயலாளர் குழ.செல்வராசு, உலகத்தமிழ் கவிஞர் பேரவை கு.சீத்தா முன்னிலை வகித்தனர்.  மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.  அவர் பேசும்போது, பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு மற்றும் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு நீங்கி அனைவரும் அனைத்தும் பெற்று வாழ்வதற்காக பெரியார் நடத்திய போராட்டங்கள், அதனால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து பேசினார். 
கூட்டத்தில்  தலைமைக் கழக சொற்பொழிவாளர் பிராட்லா, தி.க. மருத்துவரணி மாநில பொதுச் செயலர் கோ.சா.குமார், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,  திக மாநில இளைஞரணி செயலர் த.சீ.இளந்திரையன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சு.அருணாசலம், மாவட்ட திக துணைத் தலைவர் ஓவிய இமயம் மு.கலைச்செழியன், நைனார்பாளையம் திக தலைவர் புலவர் கு.அண்டிரன் உள்ளிட்டோர் பேசினர்.
 மாவட்ட திக அமைப்பாளர் த.பெரியசாமி மாவட்ட மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், கள்ளக்குறிச்சி திக ஒன்றியத் தலைவர் புலவர் பெரியார் நேசன், தியாகதுருகம் ஒன்றிய திக தலைவர் மொ.தண்டபானி,  விழுப்புரம் மாவட்டச் செயலர் சே.வ.கோபன்னா, விருத்தாசலம் மாவட்டச் செயலர் முத்து கதிரவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 
நிகழ்ச்சியை பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பெ.எழிலரசன் தொகுத்து வழங்கினார். கள்ளக்குறிச்சி நகர திக தலைவர் ச.சுந்தரராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.