செஞ்சி அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்பிலான 19,425 லிட்டர் எரிசாராயம் நீதிபதி முன்னிலையில் ஆற்றில் ஊற்றி அழிக்கப்பட்டது.
செஞ்சியை அடுத்த அவலூர்பேட்டையில் 555 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19,425 லிட்டர் எரிசாராயம்
கடந்த மாதம் மதுவிலக்கு போலீஸாரின் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சாராயத்தின் சந்தை மதிப்பு ரூ.27 லட்சத்து 75ஆயிரம் ஆகும்.
எரிசாராயத்தை செஞ்சி நீதித்துறை நடுவர் எம்.வீரணன் (பொறுப்பு) உத்தரவுப்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதியின் பேரில், மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், செஞ்சி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் அழிக்க நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, நீதித்துறை நடுவர் எம்.வீரணன், செஞ்சி தலைமை எழுத்தர் பாபுதீன் முன்னிலையில் செஞ்சியை அடுத்த மேல்களவாய் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் சாராயம் ஊற்றி தீ வைத்து அழிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக செஞ்சி தீயணைப்பு நிலைய தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







