செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

எஸ்.ஐ.க்கு எதிராக எம்.எல்.ஏ. சாலை மறியல் முயற்சி

கள்ளக்குறிச்சியில் வாகன தணிக்கையின்போது, இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர் மீது வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து,

Updated On :8 அக்டோபர் 2018, 8:56 am IST

கள்ளக்குறிச்சியில் வாகன தணிக்கையின்போது, இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர் மீது வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ உதயசூரியன் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தார்.
 கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பார்த்தீபன். இவர், கச்சிராயப்பாளையம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அருகேயுள்ள வெங்கடம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல் (38) தள்ளாடியவாறு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தாராம்.
 அவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது.
 உடனே போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மது போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்ததாக வழக்குப் பதிவு செய்தார்.
 உடனே அந்த நபர், உதயசூரியன் எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சிக்கு வருமாறு அழைத்ததன் பேரில் வந்ததாகத் தெரிவித்து, எம்.எல்.ஏவை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு, செல்லிடப்பேசியை உதவி ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
 இதுகுறித்து அறிந்த உதயசூரியன் எம்.எல்.ஏ., போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து கட்சித் தொண்டர்களுடன் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தார்.
 தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்க.விஜயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
 தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஒலிவாங்கி மூலம் தொடர்பு கொண்டு, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பார்த்தீபனை விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்ற உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.