தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

காந்தி ஜயந்தி விடுமுறை அளிக்காத 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் காந்தி ஜயந்தி தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் விதி மீறிய 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On :8 அக்டோபர் 2018, 9:24 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் காந்தி ஜயந்தி தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் விதி மீறிய 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் ராமு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி தேசிய விடுமுறை என்பதால் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
 அவசர காரணங்களுக்காக வேலை செய்ய நேர்ந்தால், அன்றைய தினத்துக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் அல்லது 3 நாள்களுக்குள் மாற்று விடுப்பு வழங்குவது குறித்து நிர்வாகம் தெரிவித்து, அதற்கான 5 ஏ விண்ணப்பம் வழங்க வேண்டும். இந்த நடமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
 இதில், 40 கடைகள் முறையாக தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காதது தெரிய வந்தது.
 இதேபோன்று, 22 உணவகங்களும், 11 மோட்டார் வாகன பழுதுபார்ப்பகங்களும் விதி மீறி, காந்தி ஜயந்தி அன்று தொழிலாளர்களை வேலைக்கு வரவழைத்தது தெரிய வந்தது.
 இது தொடர்பாக 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்ற ஈட்டு இணைக் கட்டணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.