தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

உளுந்தூர்பேட்டை வட்டம் கருவேப்பிலைப்பாளையம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :22 அக்டோபர் 2018, 3:16 am

உளுந்தூர்பேட்டை வட்டம் கருவேப்பிலைப்பாளையம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்காளம்மன், விநாயகர், செல்லியம்மன், மகாகாளியம்மன், காத்தவராயன், பாவாடைராயன், வீரன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோயிலில் புனரமைப்பு செய்யப்பட்டது. சனிக்கிழமை (அக்.20) கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், அனுக்ஜை, தனபூஜை, வாஸ்துசாந்தி நடைபெற்றன. 
ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி, தீபாராதனை அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.  
காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு, அங்காளம்மன், விநாயகர், செல்லியம்மன், மகாகாளியம்மன், காத்தவராயன், பாவாடைராயன், வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.  கோயில் குருக்கள் புனித நீரை கோயிலின் கலசம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. ராஜேந்திரன், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை இணையத் தலைவர் கே.ஜி.பி.ஞானமூர்த்தி,  திருநாவலூர் திமுக ஒன்றியச் செயலாளர் ஜி.ஆர்.வசந்தவேல், எலவனாசூர்கோட்டை பகவதி பீடம் குருஜி வெங்கட்ராம்ஜி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 
ஏற்பாடுகளை விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.