மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

 விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருக்கோவிலூர், சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:11 am

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருக்கோவிலூர், சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
 வரும் 13-ஆம் தேதி நடைபெறவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சார்-ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ் முன்னிலை வகித்தார். வருவாய் வட்டாட்சியர் செல்வராஜ் வரவேற்றார். திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் வட்டங்களுக்கு உள்பட்ட வருவாய்த்துறையினர், காவல்துறையினர், விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர், சிலை வடிவமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
 இதேபோல, சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் தினேஷ் தலைமை வகித்துப் பேசினார்.
 கூட்டத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ், காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் வட்டாட்சியர் பாண்டியன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரங்கசாமி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.