புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஏரியில் மணல் சரிந்து தொழிலாளி சாவு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மணல் அள்ளிய போது மணல் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:27 am

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மணல் அள்ளிய போது மணல் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
 விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் அய்யனார் (52). இவரும், அதே ஊரைச் சேர்ந்த மேலும் 2 பேரும், செஞ்சி அருகேயுள்ள கஞ்சனூர் ஏரியில் சுரங்கம் போன்று உள்ள மிகப் பெரிய பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.
 அப்போது, பள்ளத்தின் ஒரு பகுதியிலிருந்து அய்யனார் மீது மணல் சரிந்தது. மேலும், மழை பெய்ததால் ஈரமாக இருந்த பெரிய மணல் திட்டும் அவர் மீது சரிந்தது. இதில் சிக்கிய அவர் உயிரிழந்தார். அவருடன் இருந்த மற்ற இருவரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். தகவலறிந்த கஞ்சனூர் போலீஸார், அய்யனாரின் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
 கிராம மக்கள் சாலை மறியல்: இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழுப்புரம்-செஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 அப்போது, அவர்கள் விக்கிரவாண்டி வருவாய் அலுலர்கள் மற்றும் கஞ்சனூர் காவல் நிலைய அதிகாரிகள், சட்டவிரோதமாக இதுபோன்று மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்தாமல் அதற்கு துணை போகின்றனர். எனவே, இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன என்று குற்றஞ்சாட்டினர்.
 மறியலில் ஈடுபட்டவர்களிடம் செஞ்சி டிஎஸ்பி ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொது மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், கஞ்சனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தர்மலிங்கத்தை விழுப்புரம் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.