கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

காவலர் உடல் தகுதித் தேர்வு: மேற்பார்வை அதிகாரியாக வடக்கு மண்டல ஐ.ஜி.

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவுள்ள காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வைக் கண்காணிக்க மேற்பார்வை அதிகாரியாக வடக்கு மண்டல ஐ.ஜி. பொ.நாகராஜன் பங்கேற்கிறார்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவுள்ள காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வைக் கண்காணிக்க மேற்பார்வை அதிகாரியாக வடக்கு மண்டல ஐ.ஜி. பொ.நாகராஜன் பங்கேற்கிறார்.
 தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைத்துறைக் காவலர், தீயணைப்போர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு முடிந்து, உடல் தகுதித் தேர்வு பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளன. கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்.7) முதல் உடல் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. இதையடுத்து, உடல் திறன்போட்டிகளும், நிறைவாக சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற உள்ளன.
 இந்தத் தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்க விழுப்புரம் தேர்வு மையத்தின் உயர் அதிகாரி பொறுப்பில் மேற்பார்வை அதிகாரியாக வடக்கு மண்டல ஐ.ஜி. பொ.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த நிலையில், தேர்வு மையத் தலைவராக விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாரும், தேர்வு மைய கண்காணிப்பு உறுப்பினர்களாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 கண்காணிப்பு உறுப்பினராக அதிகாரிகள் 5 பேர் வரை இடம்பெறுவர். அவர்களில் சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன், பெண் அதிகாரி ஒருவரும் இடம் பெற உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.