
கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் உயிர்நீத்த தொண்டர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்
விழுப்புரம் மாவட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் உயரிழந்த திமுக தொண்டர்கள் குடும்பத்தினருக்கு கட்சி சார்பில், புதன்கிழமை தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் உயரிழந்த திமுக தொண்டர்கள் குடும்பத்தினருக்கு கட்சி சார்பில், புதன்கிழமை தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்த தகவலைக் கேட்ட திமுக தொண்டர்கள் பலர் அதிர்ச்சியிலும், தற்கொலை செய்துகொண்டும் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சி நிதியிலிருந்து அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்த விழுப்புரம் முத்தோப்பு எஸ்.பன்னீர்செல்வம், வி.மருதூர் ராஜா, அத்தியூர்திருவாதி ஜெயமூர்த்தி, கண்டாச்சிபுரம் கோபால், கோலியனூர் மனோகரன், முண்டியம்பாக்கம் மோகன், நெசல் கோவிந்தசாமி, சந்தைப்பேட்டை குமரவேல் ஆகியோரது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மத்திய மாவட்டச் செயலர் க.பொன்முடி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். மாவட்டப் பொருளாளர் புகழேந்தி, நகரச் செயலர் சக்கரை, பொன்.கௌதமசிகாமணி உள்ளிட்ட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.
செஞ்சியில்: செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மேல்அருங்குணம் கிராமத்தில் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கருணாநிதி படத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிக்கு செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலர் ஆர்.விஜயகுமார் தலைமை வகித்தார். ஊராட்சிச் செயலர் துரைசாமி வரவேற்றார். ஒன்றிய அவைத் தலைவர் பச்சையப்பன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அய்யாதுரை, இளைஞரணி ஜம்போதி பழனி, நிர்வாகிகள் செஞ்சி பழனி, நெல்லிமலை வாசு, வரிக்கல் செல்வமணி, புதுப்பேட்டை கணபதி, துத்திப்பட்டு குமரவேல், தேவதானம் பேட்டை ஆனந்தமூர்த்தி, பெருமாள், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






