
சதுர்த்தி: விநாயகர் சிலை, பூஜை பொருள்கள் விற்பனை அமோகம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள், பூஜை பொருள்கள் விற்பனை புதன்கிழமை சூடுபிடித்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள், பூஜை பொருள்கள் விற்பனை புதன்கிழமை சூடுபிடித்தது.
விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்காக களிமண் விநாயகர் சிலைகள், எருக்கம்பூ மாலை, அருகம்புல், விநாயகர் குடைகள், கரும்பு, ஆப்பிள், பேரிக்காய், விளாம்பழம், சோளம், அவல், பொரி, கடலை உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனைக்காக விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளில் புதன்கிழமை குவித்து வைக்கப்பட்டன. இந்தப் பொருள்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
குறிப்பாக, விழுப்புரம் நகரில் நேருஜி சாலை, கே.கே. சாலை, திரு.வி.க. வீதி, காந்தி வீதி, பாகர்ஷா வீதி உள்ளிட்ட இடங்களில் களிமண் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. பலவித வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சித்தி விநாயகர், கற்பக விநாயகர், தொந்தி விநாயகர், எண்ணெய் பிள்ளையார், மண் பிள்ளையார் என வித விதமான களிமண்ணாலான விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன.
விழுப்புரம் அருகே உள்ள கண்டமங்கலம், அரசூர், பண்ருட்டி பகுதிகளிலிருந்து வந்த மண்பாண்ட தொழிலாளர்கள் பலர் விநாயகர் சிலைகளை விற்பனைக்கு குவித்து வைத்திருந்தனர். இந்த சிலைகள் அளவுக்கேற்ப ரூ.25, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.250 உள்ளிட்ட விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. விநாயகர் குடைகள் ரூ.15, ரூ.25, ரூ.50 விலைகளில் விற்கப்பட்டன.
புதன்கிழமை மாலை முதல் விநாயகர் சிலைகள், பூஜை பொருள்கள் விற்பனை சூடுபிடித்தது. இதனால், நேருஜி சாலை, திரு.வி.க. வீதி, காந்தி வீதி, பாகர்ஷா வீதிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதேபோல, மாவட்டம் முழுவதும் முக்கிய வீதிகளில் விநாயகர் சிலைகள், பூஜை பொருள்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





