தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

சாலை விபத்தில் 2 ஊராட்சி எழுத்தர்கள் சாவு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஊராட்சி எழுத்தர்கள் இருவர் உயிரிழந்தனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:45 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஊராட்சி எழுத்தர்கள் இருவர் உயிரிழந்தனர்.
செஞ்சி வட்டம், சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்த பீமன் மகன் தமிழ்நம்பி (22). ஊராட்சி எழுத்தர். இவர் ஞாயிற்றுக்கிழமை மேல்புதுப்பட்டு ஊராட்சி எழுத்தரான க.சந்திரலேகாவுடன் (25) மோட்டார் சைக்கிளில் வளத்தி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அண்ணமங்கலம் கூட்டுச்சாலை அருகே வந்த போது, சாத்தனந்தலில் இருந்து செஞ்சிக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தமிழ்நம்பி, சந்திரலேகா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயமடைந்த தமிழ்நம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்திரலேகாவை மீட்ட போலீஸார், செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து வளத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.