தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

கல்லை தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

கல்லைத் தமிழ்ச் சங்கம்,  கள்ளக்குறிச்சி அறிவுத் திருக்கோயில் ஆகியவை சார்பில் பொங்கல் திருநாள், திருக்குறள் போட்டி, திருக்குறள் தொடர் சொற்பொழிவு ஆகிய முப்பெரும் விழா கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல்

Updated On :23 ஜனவரி 2019, 9:47 am IST

கல்லைத் தமிழ்ச் சங்கம்,  கள்ளக்குறிச்சி அறிவுத் திருக்கோயில் ஆகியவை சார்பில் பொங்கல் திருநாள், திருக்குறள் போட்டி, திருக்குறள் தொடர் சொற்பொழிவு ஆகிய முப்பெரும் விழா கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையிலுள்ள அறிவுத் திருக்கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அறிவுத் திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் சி.கோவிந்தசாமி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் செ.வ.புகழேந்தி, நெறியாளர் புலவர் மது.நாராயணசாமி, வழக்குரைஞர் சங்கத் தலைவர் த.சின்னத்தம்பி, அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளர் வெ.ஜெயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். சென்னை தமிழ்ச் சங்க செயலாளர் 
செ.வ.இராமாநுசன் வரவேற்றார்.
வை.ந.பழனியப்பன் இரவச்சம் திருக்குறள் அதிகாரத்துக்கு விளக்கமளித்தார். மாரி கண்ணதாசன் "பொங்கல் பொங்கல், புதுமைப் பொங்கல்' எனும் தலைப்பில் கவிதை பாடினார். "தந்தை பெரியார் கண்ட தமிழர் திருநாள்' எனும் தலைப்பில் பெரியார், அம்பேத்கார், தமிழ்க் கழகத் தலைவர் கலிய.செல்லமுத்து உள்ளிட்டோர் உரையாற்றினர். 
" சிறிய முறுவல் புதிய முறுவல்' எனும் தலைப்பில் தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இராச.நடேசன் ஆய்வுரை வழங்கினார்.  "பாரோர் போற்றும் பழந்தமிழர் பண்பாடு' எனும் தலைப்பில் கல்லைத் தமிழ்ச் சங்கக் காப்பாளர் வே.உதயகுமார் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
"வள்ளுவர் பெரிதும் வாழ்வில் வலியுறுத்துவது அறமா, பொருளா' எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. புதுச்சேரி சிவசு அறக்கட்டளையின் தலைவர் சு.சண்முகசுந்தரம் நடுவராகச் செயல்பட்டார்.
 நிகழ்ச்சிகளில் தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், தென்னாற்காடு மாவட்ட  கவிஞர் மன்றத் தலைவர் ஆசுகவி.ஆராவமுதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கல்லைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் செ.வ.மதிவாணன் நன்றி கூறினார். முன்னதாக,    மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் 
வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.