சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மதுப் புட்டிகள் கடத்தியவர் கைது

புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்த இளைஞரை திண்டிவனம் அருகே  கிளியனூரில் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 9:46 am IST

புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்த இளைஞரை திண்டிவனம் அருகே  கிளியனூரில் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கிளியனூர் சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, புதுச்சேரியிலிருந்து வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, சோதனையிட்டனர். அதில், சுமார் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 191 மதுப் புட்டிகள் இருந்தன.
இது தொடர்பாக காரில் இருந்த நபரிடம் விசாரித்ததில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஏனத்தூரைச் சேர்ந்த கணேசன் மகன் சந்தோஷ் (27) என்பதும், புதுச்சேரியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு மதுப்புட்டிகளை கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.  அவரை போலீஸார் கைது செய்து, மதுப் புட்டிகளுடன் காரை கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.