/

இளைஞர் பெருமன்ற வட்ட மாநாடு

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 9-ஆவது  விழுப்புரம் வட்ட மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.  

Updated On :23 ஜனவரி 2019, 9:47 am IST

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 9-ஆவது  விழுப்புரம் வட்ட மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.  
விழுப்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு வட்டப் பொருளாளர் இரா.அருண்பிரசாத் தலைமை வகித்தார்.  முன்னாள் மாநில துணைத் தலைவர் ஏ.வி.சரவணன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர்.ஆனந்தராஜ் தொடக்க உரையாற்றினார்.  விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஆர்.அருண் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.   
கூட்டத்தில்,  இளைஞர் பெருமன்ற உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும்,  திருக்கோவிலூரில் நடைபெறவுள்ள மாவட்ட மாநாடு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.  தொடர்ந்து, புதிய வட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.  
தலைவராக கே.அதியமான்,  செயலராக இரா.அருண்பிரசாத்,  பொருளாளர் அபிலாஷ்,  துணைத் தலைவர் வசந்த், துணைச் செயலர் சக்திவேல்,  ராஜேஷ்,  முபாரக்,  அண்ணாமலை  உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
விழுப்புரம் வட்டத்தில் கிராமப்புறங்களில், பள்ளி நேரங்களில்,    கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்,  அனைத்து கிராமங்களிலும் நூலக வசதியை ஏற்படுத்த வேண்டும்,  இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க வங்கிகள் மூலம் தடையின்றி தொழில் கடனுதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.