உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 102 -ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலாளர் ஜி.மணிராஜ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எஸ்.துரை தொடக்கவுரையாற்றினார். திருநாவலூர் ஒன்றியச் செயலாளர் ஏ.ஆர்.செண்பகவேல், முன்னாள் ஒன்றியச் செயலாளர் இரா.ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் இரா.சாய்ராம், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்டச் செயலாளர் எம்.கிருஷ்ணன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆர்.பழனிவேல் ஆகியோர் வரவேற்றனர். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு எம்.எல்.ஏ., தலைமைக் கழகப் பேச்சாளர் வி.ஆர்.ஜெயதேவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.இராமலிங்கம், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலர் எஸ்.கே.இராமசாமி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சௌ.இராமலிங்கம் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நகர துணைச் செயலாளர் கே.கஜேந்திரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின், இபிஎஸ் இணைவார்கள் : ஆதவ் அர்ஜுனா
வரி அமைப்பில் மாற்றம்? பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் அரசு கருத்துகேட்பு: நிர்மலா சீதாராமன்
நீட் மறுதேர்வு: மாநில முதல்வர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்!






