விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வராத ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள்!
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர


விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாமல், 6 மாதங்களாக முடங்கிக் கிடப்பதால் நோயாளிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.
மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்து வந்த விழுப்புரம் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி வருகைக்குப் பிறகு வட்ட அளவிலான மருத்துவமனையாகவே இன்றளவும் இயங்கி வருகிறது. மேலும்,
அவசர சிகிச்சைப் பிரிவு, பெண்கள் பிரிவு, கர்ப்பிணிகள் பிரிவு, ஆண்கள் பிரிவு, காய்ச்சல் பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட மொத்தம் 100 படுக்கை வசதிகளைக் கொண்டுள்ளது. சிறிய அளவிலான மருத்துவமனையாக இருந்தாலும், எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை, குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை, கர்ப்பப்பை அறுவைச் சிகிச்சை போன்றவையும் செய்யப்படுகின்றன. ஆகையால், இந்த மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த மருத்துவமனை வசதிகளை மேம்படுத்தும் வகையில் அரசு சார்பில் ரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ் மிஷின்) இயந்திரங்கள் இரண்டு வழங்கப்பட்டன. அந்த இயந்திரங்கள் வழங்கி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
சிறுநீரங்கள் செயல் இழக்கும்போது, ரத்தத்தில் கலந்துள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்காகவும், ரத்தத்தை சுத்திகரித்து உயிரைக் காப்பதற்கு இந்த டயாலிஸிஸ் இயந்திரங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட இரண்டு டயாலியஸ் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இருப்பது, நோயாளிகளுக்கான சிகிச்சை கிடைப்பதை தாமதப்படுத்துவதாகவே அமைகிறது.
இந்த இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வருவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (ஆர்.ஓ.) வசதி இல்லை என்றும், சிகிச்சை அளிக்க சிறுநீரகவியல் மருத்துவர் அல்லது பொதுமருத்துவத்தில் முதுகலை மருத்துவர் தேவை என்றும் கூறப்படுகிறது. மேலும், இயந்திரங்களை வைத்து சிகிச்சை அளிக்க போதிய கட்ட வசதி தயாராகவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து விழுப்புரம்
மருத்துவமனை முதன்மை அதிகாரி (பொ) மருத்துவர் லதாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: 2 ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் இந்த மருத்துவமனைக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டன. இந்த இயந்திரங்களின் மூலமாக சிகிச்சை அளிக்க முதுகலை பொது மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவர்கள் இந்த மருத்துவமனையில் இல்லை.
ஆனால், அவர்களுக்குப்
பதிலாக பிற மருத்துவர்கள் இருவருக்கு கடலூரில் 15 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, தயார் செய்யப்படுகின்றனர். அவர்கள் மூலமாக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். தேவை ஏற்பட்டாலோ அல்லது அவசர காலத்திலோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகவியல் மருத்துவரை அழைத்து சிகிச்சை அளிக்கப்படும்.
தற்போது, சிகிச்சை அளிக்க முதலில் கட்டடம் மற்றும் மின் வசதி தேவை. அதற்காக பொதுப்பணித் துறையிடம் வலியுறுத்தியுள்ளோம். பழைய கட்டடம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அதனை பொதுப்பணித் துறை சீரமைத்துக் கொடுத்ததும், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...