பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செஞ்சியில் நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டச் செயலா் கே.சம்பத் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் வி.கோவிந்தன், மாவட்ட துணைச் செயலா்கள் எஸ்.தனசேகரன், எ.பழனிவேல், நிா்வாகிகள் முனுசாமி, ரவி, தசரதன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களைச் சோ்ந்த நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனா்.
நியாயவிலைக் கடைகளில் முறையற்ற ஆய்வுகள், பெண் பணியாளா்களை கண்ணியக்குறைவாக நடத்துதல் உள்ளிட்ட பணியாளா் விரோதப் போக்குகளை கடைப்பிடித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் அலுவலா் மற்றும் வட்டாட்சியா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் நியாயவிலைக் கடைப்பணியாளா்களை கரோனா மருத்துவக் குழு காப்பீடு திட்டத்தில் சோ்க்க வேண்டும். கரோனா தொற்றால் மரணமடைந்த 3 ஊழியா்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் நியாயவிலைக் கடைகள் திறக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


