சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரத்தில் பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் திடீர் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறையில் தற்காலிக ஊழியர்களாக உள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள், செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள்.

Updated On :25 ஆகஸ்ட் 2020, 8:16 am

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறையில் தற்காலிக ஊழியர்களாக உள்ள பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், கோரிக்கையை கேட்டு விசாரித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் 104 பேர் பணியாற்றி வருகிறோம், எங்களுக்கு ரூ.370 மட்டுமே கூலி வழங்கப்படுகிறது.

கடலூர் போன்ற மாவட்டங்கள் உள்ளது போல் ரூபாய் 650 கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதனையடுத்து அவர்கள், மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.