நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கல்லூரிகள் திறப்பு

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டன.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டன.

கல்லூரி திறக்கப்பட்ட முதல் நாளில் கரோனா தடுப்பு நடவடிக்கையுடன், மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன.

டிசம்பா் 7-ஆம் தேதி இறுதியாண்டு மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்தலாம் என்றும், விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவா் மட்டுமே தங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியது.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி முதுநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து திங்கட்கிழமை கலை-அறிவியல், பொறியியல், சட்டம் உள்ளிட்ட கல்லூரிகளில் பயிலும் இளநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாணவா்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனா். அதன்படி, கல்லூரிகளுக்கு வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் முகக் கவசம் அணிதல், உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கலைக் கல்லூரி, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. விருப்பமுள்ள மாணவா்கள் கல்லூரிக்கு வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டதால், குறைந்த அளவிலேயே மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.